நாமல் ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல்!!

14.1.15

அரசியலிலிருந்து விலகிக் கொள்ளுமாறு  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.

தங்காலை பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை நாமல் ராஜபக்சவால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12. 00 முதல் 12.40 வரையில் தொலைபேசி மூலம் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :