ஆட்சியில் நீடிக்க முயன்ற ராஜபக்சே! ராணுவ தளபதி மறுப்பு !

11.1.15

இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ராஜபக்சே, ராணுவத்தின் மூலம் ஆட்சியில் நீடிக்க முயற்சி செய்தது அம்பலமாகி உள்ளது.


இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில், தோல்வியை அறிந்த ராஜபக்சே, ராணுவத்தை தலைநகர் கொழும்புவில் குவிக்குமாறு தனது உதவியாளர்கள் மூலம் ராணுவ தளபதிக்கு உத்தரவிட்டதாகவும், தேர்தல் முடிவுகள் செல்லாது என்று அறிவித்து, அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்கவும் அவர் முயற்சி மேற்கொண்டார் என்றும் செய்திகள் வெளியானது.


இந்தநிலையில் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனவின் செய்தித்தொடர்பாளர்  ராஜித சேன ரத்ன,


தேர்தல் முடிவுகள் வெளியான உடன் நாடு முழுவதும் படை வீரர்களை குவிக்கும்படி ராணுவத் தளபதிக்கு ராஜபக்சே தரப்பில் இருந்து உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் ராணுவ உதவியுடன் தொடர்ந்து அதிகாரத்தில் நீடிக்க ராஜபக்சே முயற்சி மேற்கொண்டார்.

 இதுகுறித்து அறிந்த நாங்கள், ராணுவத் தளபதியை தொடர்வு கொண்டு படைகளை குவிக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்தோம். இதனை ஏற்றுக்கொண்ட ராணுவத் தளபதி படைகளை குவிக்க மறுத்துவிட்டார். இவ்வாறு  ராஜித சேன ரத்ன தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :