டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்கு சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார்

10.1.15


ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி  மைத்திரிபால சிறிசோன தனது பதவியை பொறுப்பேற்கவுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் குறித்த அறிவிப்பினை விடுத்திருக்கின்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி நல்லாட்சியாக நடைபெறும் பட்சத்தில் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு நாம் தயார்.

 நாம் இணக்க அரசியல் நிலைப்பாட்டினை தொடர்ந்தும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றோம். இதனடிப்படையிலேயே முன்னைய ஆட்சியாளர்களுடனும் பேசி கொள்கை ரீதியான உடன் பாட்டுடன் நாம் செயற்பட்டோம். அந்தவகையில் புதிய ஆட்சியிலும் அவ்வாறான ஏது நிலைகள் உருவாகுமானால் அதனை பரிசீலிக்கவும் அவர்களுடன் இணைந்து செயலாற்றவும் நாம் தயார் நிலையில் இருக்கின்றோம் என அவர் கூறியுள்ளார்.

புதிய அரசில் டக்ளஸ் இணைவதை கூட்டமைப்பு அனுமதிக்காது! சுமந்திரன்
புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அரசாங்கத்தின் அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா இடம்பெறுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  கருத்துத் தெரிவித்துள்ளார்

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றத் தயார் என நேற்று வியாழக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :