மஹிந்த, நாமலின் முகங்கள் பொறித்த 68,000 கடிகாரங்கள்

18.1.15

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் முகங்கள் பொறிக்கப்பட்ட 68,000 சுவர்க்கடிகாரங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெய்யந்துடுவ, மாபிம பிரதேசத்திலிருந்த களஞ்சியசாலையொன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்காக அச்சடிக்கப்பட்டிருந்த ஒருதொகை சுவரொட்டிகளும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மஹர நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சோதனை விறாந்தின் அடிப்படையிலேயே அந்த களஞ்சியசாலை, நேற்று ஞாயிற்றுக்கிழமை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

குறித்த களஞ்சியசாலையானது துறைமுக அதிகாரியொருவருக்கு 15 இலட்சம் ரூபாய் செலுத்தி குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக களஞ்சியசாலையின் உரிமையாளர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :