ஜனாதிபதி செயலகத்தின் 53 வாகனங்கள் பிட்டகோட்டேயில் கண்டுபிடிக்கப்பட்டன

23.1.15

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 53 வாகனங்கள், பிட்டகோட்டேவிலுள்ள ஸ்ரீஜயவர்தனபுர பலநோக்கு கூட்டுறவுச் சங்க வளாகத்திலிருப்பதை பொலிஸார் நேற்றிரவு கண்டுபிடித்துள்ளனர்.

மீரிஹான  பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இவ்வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்று பாதுகாப்பு ஊழியர்கள் இவ்வாகனங்களின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். இவ்வானங்கள் ஜனாதிபதி செயலகத்துக்குரியவை என்பதை மேற்படி பாதுகாப்பு ஊழியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :