மகிந்தவின் மாளிகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 3 நவீனரக பென்ஸ்கார்கள்

16.1.15

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு சொந்தமான அதி சொகுசு வாய்ந்த வீடொன்றிலிருந்து சில பொருட்கள் மற்றும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற வகையில் செய்திகள் வெளியாகியுள்ளன. நாணகல தெருவில் 02 கிலோ மீற்றர் பகுதியில் சிங்கராஜ வனத்திற்குரிய 40 ஏக்கர் நிலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு சொந்தமான அதி சொகுசு வாய்ந்த வீடொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த வீட்டிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், குறித்த வீட்டில் நிலத்திற்கு கீழ் வாகனத்தரிப்பிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றில் 3 நவீன ரக பென்ஸ் கார்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

0 கருத்துக்கள் :