மஹிந்த குடும்பத்தினருக்கு எதிராக 2000 முறைப்பாடுகள்

31.1.15

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ, பஷில், கோத்­த­பாய, யோசித்த, சிரந்தி உள்­ளிட்ட ராஜ­பக் ஷ குடும்­பத்­தி­ன­ரி­னதும் அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் ஊழல் தொடர்­பி­லான முறைப்­பா­டுகள் 2000 பதி­வா­கி­யுள்­ளன. இவற்றில் 30 முறை­யீ­டு­களே இலங்கை ஊழல் தடுப்பு ஆணைக்­கு­ழுவில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

இது குறித்­தான தம்­மி­ட­முள்ள மேலும் 20 முறைப்­பா­டுகள் விரைவில் தாக்கல் செய்­யப்­படும். குறித்த முறைப்­பா­டு­களில் 150 மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு எதி­ரா­னது என ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு சுட்டிக் காட்­டி­யது.
கொழும்­பி­லுள்ள தேசிய நூல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அதன் ஏற்­பாட்­டாளர் வசந்த சம­ர­சிங்க இதனை தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,
முன்­னைய அர­சாங்கம் பல ஊழல் மோச­டிகள், குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளா­கி ­யுள்­ளது. இந்­நி­லையில் இது தொடர்பில் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்­குழுவில் முறைப்­பாடு செய்­யப்­பட்ட போதிலும் எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் எடுத்­த­பா­டில்லை.

ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்­பி­னது ஊழல் மோசடி தொடர்­பி­லான ஆவ­ணங்­களை தற்­போது திரட்டி வரு­கி­றது.
இதற்­க­மைய இது­வரை 2000 முறைப்­பா­டுகள் எம்­மிடம் கிடைக்கப் பெற்­றுள்­ளன. குறித்த முறைப்­பா­டு­க­ளா­னது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, பஷில் ராஜ­பக்ஷ, கோத்­த­பாய ராஜ­­பக் ஷ, சிரந்தி ராஜ­­ பக் ஷ, யோசித்த, ரோஹித்த ராஜ ­பக் ஷ உள்­ளிட்ட ராஜ­பக் ஷ குடும்­பத்­தி­ன ­ரிற்கும் மேலும் முன்­னைய அர­சாங்­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய அமைச்­சர்கள் தொடர்­பி­லான மோசடி குறித்த முறைப்­பா­டு­களும் எமக்கு கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

இதற்­க­மைய மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு எதி­ராக 150 முறைப்­பா­டு­களும் சஜித்வாஸ் குண­வர்­தன எம்­.பி.க்கு எதி­ராக 200 முறைப்­பா­டு­களும் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.இவற்றில் 30 முறைப்­பா­டுகள் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்­கு­ழு­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

மேற்­கு­றித்த முறைப்­பா­டுகளை உரிய முறையில் செய்து மேலும் 20 முறைப்­பா­டுகள் விரைவில் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளது.குறித்த முறைப்­பா­டு­க­ளுக்கு அமை­வாக சஜித்வாஸ் குணவர்த்தன எம்.பி. யின் மனைவியின் பெயரில் சிங்கப்பூ ரில் ஹோட்டல் இருப்பதாகவும் முன் னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கம கேவிற்கு சிங்கப்பூர் வங்கி ஒன்றில் கணக்கு இருப்பதாகவும் தகவல் கிடைக் கப்பெற்றுள்ளது.

0 கருத்துக்கள் :