ஒரு லட்சத்து 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மைத்திரி பால சிறிசேனா முன்னிலை

9.1.15

இலங்கை அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரி பால சிறிசேனா 1,14,457 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

மைத்திரி பால சிறிசேனா 7,06,740 வாக்குகள் பெற்றுள்ளார். ராஜபக்சே 5,65,521 வாக்குகள் பெற்றுள்ளார். மைத்திரி பால சிறிசேனா 53.44 சதவிகித வாக்குகளும், ராஜபக்சே 45.18 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளனர். 

நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் 74,731 வாக்குகள் வித்தியாசத்தில் மைத்திரி பால சிறிசேனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
   தேர்தலில் ஏற்பட்ட தொடர் பின்னடைவுகளை அடுத்து அதிபர் ராஜபக்சே தனது  அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார். அதிகாலையிலேயே இந்த ஆலோசனை கொழும்புவில் கூடுகிறதாம்.
இதில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

0 கருத்துக்கள் :