ராஜபக்ஷ, குடும்ப உறுப்பினர்கள் உட்பட 12 பேர் மீது லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

13.1.15

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள்  உட்பட 12 பேருக்கு எதிராக   லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின்   பிரசார செயலாளர் விஜித ஹேரத் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி உட்படலானோர் இந்த முறைப்பாடடை செய்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதர்ரகளான  முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான  ரோஹித்த அபேகுணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெனாண்டோ,  முன்னாள் ஜனாதிபதியின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  முன்னாள் ஜனாதிபதியின்  சகோதரரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட்  உட்பட மேலும் பலர்  மீதே இந்த முறைப்பாடு செய்யப்பட்டது
 கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இந்தக்  குழுவினர் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

0 கருத்துக்கள் :