மகிந்தவின் பயத்திற்கு மருந்தில்லை அவர் பீதியடையக் காரணமுமில்லை

9.12.14


ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருக்கும் பீதிக்கு தன்னிடம் மருந்து கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

 மேல் மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு  ஆதரவு தெரிவிப்பதை அறிவிப்பதற்காக நேற்று  திங்கட்கிழமை மாலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது ; அண்மையில்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பத்திரிகை நிறுவன பிரதானிகளை சந்தித்த வேளையில் தான் மைத்திரிபாலவுடன் அல்ல சந்திரிகாவுடனேயே போட்டியிடுவதாக தெரிவித்த கருத்து தொடர்பாக  ஊடகவியலாளர் ஒருவர் ஹிருணிக்காவுடன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த சந்திரிகாவிடம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அந்த கேள்விக்குப் பதிலளித்த சந்திரிகா தொடர்ந்து தெரிவிக்கையில் ;
  சந்திரிகா அல்லது பண்டாரநாயக்க தொடர்பாக ஜனாதிபதி கொண்டுள்ள பீதிக்கு என்னிடம் மருந்தில்லை. ஏன் அவர் அவ்வாறு பீதியடைகின்றாறோ தெரியவில்லை.

 நான்  தொழில்வாய்ப்பை எதிர்பார்த்தோ, பதவிகளை எதிர்பார்த்தோ, அதிகாரத்தை எதிர்பார்த்தோ செயற்படவில்லை.
நாடு செல்லும் நிலைமையை மாற்றி நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டே செயற்படுகின்றேன்.

  இதற்காக முதற்தடவையாக சகல கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன என்றார்.

0 கருத்துக்கள் :