கூட்டமைப்பிடமிருந்து கை நழுவிப்போனது பச்சிலைப்பள்ளி பிரதேச சபை

31.12.14

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை தலைவர், உபதலைவர் உள்ளிட்ட நால்வர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு  ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளமையால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாரத்தில் இருந்த அப் பிரதேச சபை ஈபிடிபி வசமாகியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தேர்தலில் போட்டியிட்ட ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களான  உப தவிசாளர் ரிஷிதாசன், உறுப்பினர்களான பேரின்பகரன், சிவராஜா ஆகிய நால்வருமே இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :