பிரான்சுக்கா​ன சிறிலங்கா தூதரகம் கடும் அதிர்ச்சி

11.12.14

பிரான்சில் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையின் துணை அமர்வு, சிறிலங்கா அரசுக்கு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் நியூ யோர்க்கில் மைய அமர்வினை மேற்கொண்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மையத்தோடு இணைந்ததாக துணை அமர்வினை சமாந்திரதாக பிரான்சில் மேற்கொண்டிருந்தது.


பாரிசின் புறநகர் பகுதியான LE BLANC MESNIL  நகரசபையில் துணை அமர்வு இடம்பெற்றிருந்ததோடு ,நகரபிதா மற்றும் நகரசபை உறுப்பினர்கள் என அரச உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.


குறிப்பாக பிரான்சின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மரி ஜோர்ச் புவே அவர்களும் நேரடியாக கலந்து கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தனது தோழமையினைத் வெளிப்படுத்தியிருந்தார்.


இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நகரசபை பீடத்தின் அங்கீகாரம், சிறிலங்கா அரசுக்கு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரான்சுக்கான சிறிலங்காத் தூதரகம் தனது ஆட்சேபத்தினை வெளிப்படுத்தியுள்ளது.


நகரசபையில் செல்வி ஸ்ரெபனி சுரேந்திரன் மற்றும் திருமதி கோபிநாத் ஆகிய ஈழத்தினை பூர்வீகமாக கொண்ட இருபெண்கள், தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர்களாக உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.


0 கருத்துக்கள் :