மோடியைப்போன்ற மோசமான பிரதமரை நாடு கண்டதில்லை: வைகோ கடும் தாக்கு!

27.12.14

இந்திய பாராளுமன்றம் இதுவரை எத் தனையோ பிரதமர்களை சந்தித்துள்ளது. ஆனால் இந்தியாவின் மாண்புகளை அடியோடு சீர்குலைக்கிற பிரதமரை இப்போதுதான் சந்திக்கிறது  என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், ராஜேந்திரன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு விழா மதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.
இதில் கலந்துக் கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  “ ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு விழாவை மத்திய மாநில அரசுகள் கொண்டாடிடாமல் அவரது புகழை இருட்டடிப்பு செய்கிறது.

கர்நாடகா அரசு, காவேரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டிருக்கிறது. இதனால் தமிழக காவேரி டெல்டா பகுதி விவசாயிகள் 3 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள்.  மத்திய அரசின் ஒப்புதலோடு ஓராண்டிற்குள் 4 தடுப்பணைகள் கட்ட இருக்கிறார்கள். இதனால் மழைக்காலங்களில் கூட தமிழகத்திற்கு காவேரி நீர் வராத நிலை ஏற்படும்.  12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும்.
இப்படி தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்வதற்கு பதில் தமிழகத்தில் அணுகுண்டை போட்டு மொத் தமாக  அழித்து விடலாம்.  அணை கட்டுவதை தடுக்கவிலலை என்றால் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநி லங்களும் தமிழகத்திற்கு பாசன வசதி தரும் ஆறுகளின் குறுக்கே அணைகளை கட்டிவிடுவார்கள். இதனால் தமிழகத்தில் விவசாயம் மொத்தமும் அழிந்துவிடும். 
இதற்கு பிரதமரும் மத்திய அரசும் துணைபோகிறது. இப்படிப்பட்ட வஞ்சகத்தை இந்தியாவில் எந்த பிரதமரும் செய்யவில்லை. ஆனால் நரேந்திரமோடி செய்கிறார். அவரது அமைச்சரவைச செய்கின்றது. மேலும் காவேரி ஆற்றில் அணைக்கட்டினால் இந்தியாவின் ஒருமைப்படு தூள்தூளாக உடையும்.

கோட்சேவை பாராளுமன்றத்தில் புகழ்ந்து பேசிய அமைச்சரை கண்டித்ததுண்டா, மற்ற மதத்தினரை இந்துக் களாக மாற்ற முயலும் செயலை பிரதமர் கண்டுக்கொள்ளவில்லை. இந்திய பாராளுமன்றம் இதுவரை எத் தனையோ பிரதமர்களை சந்தித்துள்ளது. ஆனால் இந்தியாவின் மாண்புகளை அடியோடு சீர்குலைக்கிற பிரதமரை இப்போதுதான் சந்திக்கிறது" என்றார்.
-எம்.திலீபன்

0 கருத்துக்கள் :