இந்தியா என் உறவு; சீனா என் நண்பன்’’ ராஜபக்சே

29.12.14

அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் ராஜபக்சே.  இதற்கான தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சே ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். 


 அப்பேட்டியின்போது அவர், ’’இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தபோது, அவர் மேற்கொண்டிருக்கும் அயலுறவுக் கொள்கைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்.   நரேந்திர மோடிக்கும் எனக்கும் இரு நாடுகள் பற்றி ஒத்த பார்வைகள் உண்டு.  இதுவே எங்கள் உறவை வலுப்படுத்தியுள்ளது. 


இலங்கையில் தமிழர்கள் நன்றாகவே நடத்தப்படுகிறார்கள்.  அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்  என்பதை நீங்களே நேரில் வந்து காணுங்கள்.  


மதம், ஜாதி மற்றும் இனத்தின் அடிப்படையில் என்னால் பாகுபாடு காட்டமுடியாது.  நான் அனைவரையும் ஒன்றாகவே கருதுகிறேன்.  


ஐநாவில் தமிழில் பேசினேன்.  இது நல்லெண்ணத்தின் அடிப்படையிலான செய்கை.  நான் தமிழ் கற்க விரும்புகிறேன்.  நான் இன்னும் தமிழ் மாணவன் தான். 


மீனவர்கள் பிரச்சனையை மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும் என்று நான் நினைக்கிறேன். 


மீண்டும் ஆட்சியில் அமர்வேன் என்ற நம்பிக்கை  உள்ளது.  வடக்கு மாகாண தமிழர்கள் அதிகம் படித்தவர்கள்.  அவர்கள் எதிர்காலத்தைப்பற்றி நன்கு சிந்திக்க வேண்டும்.    சென்ற முறையை விட அதிக வாக்குகளை பெறுவேன் என்று ஆழமாக நம்புகிறேன். 


வடக்கு மாகாண கட்டமைப்புக்கு 450 பில்லியன் அமெரிக்க டாலர்களை  செலவிட்டி ருக்கிறோம்’’என்று கூறினார். 


அவர் மேலும், இந்தியா, சீனாவுடனான தமது நிலைப்பாடு என்ன என்பதை, ‘’ இந்தியா என் உறவு; சீனா என் நண்பன்’’ என்று கூறினார்.

0 கருத்துக்கள் :