மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதிக்கு சிறை

12.12.14

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றை மது போதையில் செலுத்திய சாரதிக்கு, 3 மாத சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, ஹட்டன் நீதவான் அமில ஆரியசேன நேற்று வியாழக்கிழமை (11) உத்தரவிட்டார். ஹட்டனிலிருந்து டயகமவை நோக்கிச் சென்ற மேற்படி பஸ்ஸின் சாரதியான எம்.ஜே.ஜயசேன (வயது 50), மது போதையிலேயே பஸ்ஸை செலுத்துகிறார் என பயணிகள் செய்த முறைப்பாட்டின் பிரகாரமே ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பஸ் சாரதியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி, அவர் மது போதையில் இருப்பதை உறுதி செய்ததன் பின்னரே, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக, பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்நிலையிலேயே நீதிவான், மேற்கண்ட தண்டனையை விதித்து உத்தரவிட்டார்.

0 கருத்துக்கள் :