அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ராஜினாமா கடிதம்

28.12.14

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்க தீர்மானித்ததையடுத்து, அமைச்சர்களான ரவூப் ஹக்கீப், பஷீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்களான ஹாபிஷ் நசீர், மன்சூர் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர் என அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மு.கா. ஆதரவு வழங்கும் என அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று அறிவித்ததை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் வீதிகளில் கூடி பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வருகின்றனர்.

முஸ்லிம் மக்கள் பெரும்பாலானோர் மைத்திரிபாலவை ஆதரிக்கவே திட்டமிட்டுள்ளனர் என்று முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. எனினும் கட்சித் தலைமை முடிவை அறிவிக்கத் தாமதமானதால் மக்கள் அமைதியாக இருந்தனர்.
இந்நிலையில் அரசிலிருந்து வெளியேறி பொது வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.
பொது எதிரணி வேட்பாளரை ஆதரிக்கும் முஸ்லிம் காங்கிரசின் தீர்மானத்தை வரவேற்றுள்ள முஸ்லிம் மக்கள், வீதிகளில் ஒன்றுதிரண்டு பட்டாசு கொளுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முஸ்லிம் காங்கிரசின் முடிவு காரணமாக கிழக்கு மாகாணம் எங்கும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

0 கருத்துக்கள் :