எம்.பியின் கன்னத்தை பதம்பார்த்தார் அமைச்சர்

17.12.14

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிரணிக்கும் எதிரணிகளின் உறுப்பினர்கள் ஆளும் தரப்புக்கும் குத்துக்கரணம் அடிப்பது பெருங்கதையாக இருக்கின்றது.

எனினும், எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கன்னத்தை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் பதம்பார்த்த சம்பவமொன்று தலைநகர் அரசியலையில் முணுமுணுக்கப்படுகின்றது.
தலைநகரில் இடம்பெற்ற இரவு விருந்துபசாரத்தின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சூடான பானங்களும் அங்கு பரிமாறப்பட்டதாக தகவல்கள் வெளியானநிலையில் அதனைவிடவும் எம்.பியின் கன்னத்தை பதம்பார்த்தமையே அரசியலை சூடாக்கிவிட்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
அந்த எம்.பி தன்னை சக்திமிக்கவராக காட்டிக்கொண்டாலும் கன்னத்தில் பளார் எனவிழ எம்.பியோ மின்னல் வேகத்தில் மாயமாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது, வந்தாரை வாழவைக்கும் வன்னிவள நாடு என்றழைக்கப்படும் பூமிக்கும் சீதையை, இராவணன் சிறைவைத்த பூமிக்குமே வெளிச்சமாகும்.

0 கருத்துக்கள் :