ஜனாதிபதி தேர்தலில் விசித்திர சின்னங்கள்

11.12.14

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களை, தேர்தல்கள் செயலகம், வெளியிட்டுள்ளது.

நேற்று (10) வெளியிடப்பட்டுள்ள சின்னங்களே எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 4 மணிவரை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பயன்படுத்தப்படும் வாக்கச் சீட்டுக்களில் அச்சடிக்கப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்ததுள்ளது.
17 அரசியல்; கட்சிகள் மற்றும் 2 சுயேட்சைக் குழுக்களுக்கான சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, ஸ்ரீ லங்கா சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிலை சின்னத்திலும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அன்னம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

ஜனசெத பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற பத்தரமுல்ல சீலரத்ன தேரர் - டிரக்டர் சின்னத்திலும் ஐக்கிய சமாதான முன்னணியின் சார்பில் போட்டியிடும் இ.நி.மொஹமட் மில்பார் - வண்ணத்துப்பூச்சி சின்னத்திலும் ஜனநாயக தேசியக் கட்சியில் கட்டுகம்பல அப்புஹாமிலாகே பிரசன்ன பிரியங்கர - கார் சின்னத்திலும் இலங்கை தேசிய முன்னணியில் விமல் கீகனகே - கிரிக்கெட் மட்டை சின்னத்திலும் ஐக்கிய சோசலிஷ கட்சியில் சிறிதுங்க ஜயசூரிய - முச்சக்கரவண்டி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

அத்துடன், ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பில் எம்.பி.தெமிணிமுல்ல - உண்டியல் சின்னம், சோசலிச சமத்துவக் கட்சியில் பாணி விஜேசிறிவர்தன - கத்திரிக்கோல் சின்னம், முன்னிலை சோஷலிஸ கட்சியில் துமிந்த நாகமுவ - லாம்பு சின்னம், சுயேட்சை வேட்பாளரான ஐ.எம்.இல்யாஸ் - இரட்டைக்கொடி சின்னம், பொல்கம்பலராளகே சமிந்த அநுருத்த பொல்கம்பல - மூக்கு கண்ணாடி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
எக்சத் லங்கா பொதுஜன கட்சியை சேர்ந்த ருவன்திலக்க பேதுரு ஆராச்சி கோப்பை சின்னம். நவ சிங்கள உறுமயவை சேர்ந்த  சரத் மனமேந்திர வில், அம்பு சின்னம். நவ சமசமாஜ கட்சி வேட்பாளர் சுந்தரம் மகேந்திரன் மேசை சின்னம்.

ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சி வேட்பாளர் அநுர லியனகே கங்காரு சின்னத்திலும் எமத தேசிய முன்னணியை சேர்ந்த நாமல் ராஜபக்ஷ  தொலைபேசி சின்னத்திலும் எக்ஸத் லங்கா மகா மகா சபா வேட்பானர் ஜயந்த குலதுங்க பேனா சின்னம் ஆகியவற்றில் போட்டியிடவுள்ளனர்.

0 கருத்துக்கள் :