வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் பஸ்தரிப்பிடத்தில் சடலமாக மீட்பு

10.12.14

லிந்துலை நாகசேனை பஸ் தரிப்பிடத்தில் இருந்து இன்று காலை சடலம் ஒன்று பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளது.

குநித்த நபர் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை டீ மலையில் தோட்டத்தில் உள்ள 57 வயதுடைய முனியாண்டி ஆண்டி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் (09.12.2014) நேற்று சுகயீனம் காரணமாக தனது உறவினர்களால் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவர் நேற்று இரவு திடீரென வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனையடுத்து வைத்தியசாலையிலிருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள லிந்துலை நாகசேனை பஸ் தரிப்பிடத்தில் இன்று காலை சடலமாக பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் வீதியை கடந்து செல்லும் போது பஸ் தரிப்பிடத்தில் குறித்த நபர் உயிரிழந்து கிடப்பதை கண்டுள்ளனர். அதன்பின் லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் எவ்வாறு வெளியில் சென்றார் என்பது வைத்தியசாலை நிருவாகத்திற்கு தெரியவில்லை என தெரியவருகிறது.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :