இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் திடீர் உண்ணாவிரதம்!

3.12.14

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கை கடற்படையினரால் 38 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த இந்த மீனவர்கள் அனைவரும் இலங்கை, ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைகிறது. நாளை மறுநாள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் மீண்டும் அவர்கள் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், மீனவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி இன்று (3ஆம் தேதி) காலை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :