யாழிற்கு 300 சீனி மூடைகளுடன் சென்ற பாரவூர்தி மாயம்

3.12.14


கொழும்பிலிருந்து யாழிற்கு 300 சீனி மூடைகளுடன் சென்ற பாரவூர்தியைக் காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 30ஆம் திகதி முதல் காணவில்லையென சீனி மூடைகளின் உரிமையாளர்கள் நேற்று கோப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதியை சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் இணைந்து பாரவூர்தியொன்றில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சீனி மூடைகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
பாரவூர்தியின் சாரதியும், உதவியாளரும் புத்தளம் வரை தொடர்பில் இருந்ததாகவும் அதன் பின்னர் அவர்களுடனான தொடர்பு அற்றுப்போனதாகவும் உரிமையாளர்கள் தங்கள் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :