சீரற்ற காலநிலையால் 15பேர் பலி

27.12.14

நாட்டில் நிலவும் மண்சரிவு, வெள்ளம், கடும்காற்று போன்ற அனர்த்தங்களால்  15பேர் உயிரிழந்துள்ளதாகவும் 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

12பேர் காயமடைந்துள்ளதாகவும் 258,319 குடும்பங்களைச்சேர்ந்த 937,671பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டோரில் 83,510பேர் 413 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 15பேரில் 11பேர் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர், ஏனையோர் மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி மற்றும் புத்தளம் மாவட்டத்தைச் சேர்தோராகும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான உலருணவுப்பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டசெயலகங்களுக்கு பணித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 100மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாக்கூடுமென வளிமண்மடலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

0 கருத்துக்கள் :