பிரபாகரன் பிறந்தநாள் : மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார் சீமான்

26.11.14

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

 சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மனைவி கயல் விழியுடன் கேக் வெட்டி, பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடினார்.

இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.பிரபாகரன் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளி மாணவ– மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், வழங்கப்பட்டன.

26 இடங்களில் ரத்ததான முகாம் நடைபெற்றது. குருதிக் கொடை பாசறை ஒருங்கிணைப்பாளர் அரிமாநாதன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பல இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. மரக்கன்றுகளும் நடப்பட்டன.

திருவொற்றியூர் ராஜா கடை கங்கா காவிரி திருமண அரங்கில் இன்று மாலை வரலாற்று ‘‘தலைவனுக்கு வாழ்த்துப்பா’’ என்ற மலர் வெளியீட்டு விழாவும், கூட்டமும் நடைபெறுகிறது. இதில் சீமான் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

0 கருத்துக்கள் :