சந்திரிகாவுக்கு நெருக்கடி

23.11.14

நான் ஜனாதிபதியானால் ரணிலை பிரதமராக்குவேன் என்று பொது எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அறிக்கையால் ஆளும் கட்சியிலிருந்து பொது எதிரணியுடன் இணைய விருப்பம் தெரிவித்த  உறுப்பினர்கள் சிலர் சந்திரிகாவிற்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தெரியவருகிறது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுமென பொதுஎதிரணி  பிரச்சாரம் செய்து வருகிறது. மைத்திரிபால ஜனாதிபதியானால் அதிகாரங்கள் பகிரப்பட்டு பிரதமர் ஆட்சி நடக்கலாம்.  ஆனால் பிரதமர் ரணிலாக இருந்தால் நாம் வெளியேற மாட்டோம்.

மைத்திரி கூறிய வார்த்தையை மீளப்பெற்று பிரதமர் யார் என்பதை புதிய அரசாங்கமே தீர்மானிக்கும் என அறிவிக்க வேண்டும். நாங்கள் சந்திரிகாவை  நம்பியே கட்சியிலிருந்து வெளியேறுகிறோம்.
 ரணிலை நம்பி அல்ல என சந்திரிகாவின் அழைப்பை   நம்பி ஆளும் கட்சியிலிருந்து வெளியேறவுள்ள உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளதால் சந்திரிகா முடிவெடுக்க முடியாமல் நெருக்கடியில் இருப்பதாக ஆளும்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துக்கள் :