மாவீரர் தினத்துக்கு ஏற்பாடு செய்தவரை தாக்குவதா? காவல்நிலையத்தை முற்றுகையிட்ட தி.வி.க.

26.11.14

சென்னை அபிராமபுரத்தில் காவல்நிலையத்தை திராவிடர் விடுதலை கழகத்தினர் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


மாவீரர் தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்த அந்த கழகத்தினர், அதற்கான பேனர்களை வைத்திருந்தனர். அவற்றை அகற்றிய போலீசார், இதுகுறித்து விசாரிக்க அக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் உமாபதியை அழைத்துச் சென்றனர்.


விசாரணையின்போது உமாபதி தாக்கப்பட்டார் என்று புகார் தெரிவித்த திராவிடர் விடுதலை கழகத்தினர், அபிராமபுரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்து கோசம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


பின்னர் உமாபதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை முன்பும் திராவிடர் விடுதலை கழகத்தினர் போலீசாரை கண்டித்து மறியல் செய்து கோசம் எழுப்பினர்.


பின்னர் திராவிடர் விடுதலை கழகத்தினர் மாவீரர் தினத்தை கொண்டாடினர்.

 

0 கருத்துக்கள் :