தமிழர்கள் மீது முஸ்லிம் இளைஞர்கள் தாக்குதல், இருவர் வைத்தியசாலையில்: பதற்றம்

26.11.14

இறக்குவானை டெல்வின் டீ பிரிவில் தமிழர்கள் மீது மூன்று முஸ்லிம் இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றறுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 16 வயது தழிழ் சிறுமியை முஸ்லிம் இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தின் பின்னணியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள இறக்குவானை பொலிசார் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இறக்குவானை டெல்வின் டீ பிரிவில்நேற்று இரவு  கடைக்கு சென்ற தமிழ் இளைஞர் ஒருவர் மீது மூன்று முஸ்லிம் இளைஞர்கள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இவரை பாதுகாக்க சென்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் தமிழ் இளைஞர் ஒருவரும் தமிழ் வர்த்தகர் ஒருவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் காவத்தை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவத்தால் இறக்குவானை டெல்வின் பிரிவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறக்குவானை டெல்வின் பிரிவில் 16 வயது நிரம்பிய தழிழ் சிறுமியை முஸ்லிம் இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து தப்பிச்சென்ற போது இவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு மேற்படி டெல்வின் பிரிவை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் பின்னர் சம்பந்தபட்டவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரனை நடத்தி நீதி மன்றத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் இளைஞனுக்கு எதிராக செயற்பட்ட தமிழர்கள் மீதே சம்பந்தப்பட்ட இளைஞனும் அவரது சகோதரர்களும் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேற்படி சம்பவம் குறித்து இறக்குவானை பொலிசார் இருவரை கைதுசெய்துள்ளனர். இதில் ஒருவர் இறக்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை தேடி பொலிசார் வலைவிரித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :