டுபாயிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்திய நபர்

7.11.14

டுபாயிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்திய நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து 40 இலட்சம் ரூபா பெறுமதியான 8 தங்கக் கட்டிகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மட்டக்களப்பு ,காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவராவார்.
விமான நிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :