கார்திகை வந்ததென்று காவலர் கல்லறை நாமும் செல்வோம்

25.11.14

கார்திகை வந்ததென்று
 காவலர் கல்கல்லறை நாமும் செல்வோம்”
போர்களத்தில் அவர்செய்த தீயாகங்கள்
 போற்ருதலுக்கு அவர்தானேதெய்வங்கள்
 பொழுதெல்லாம் எமைக் காத்ததெய்வங்கள்
 பொண்மணிகள் துாங்குகின்ற
 கல்லறைக்கு நாமும் சென்று
கார்திகைமலர்கள் பூத்துகுலுங்குது
 காவலர் உங்களைக்காண
 கல்லறை விட்டு இங்கே
 எழுந்து..தான் வாரீர் 

 கார்திகை மலர்களைக்காண…

இதயம் சிதறுண்டபோதிலும்
 உங்கள் நினைவில்வாழ்கிறோம் நாங்கள்.
எமக்கு விடிவின்னும் தோன்றவே இல்லை
 எழுந்துவாருங்கள் நீங்கள்.
அடிமை நிலையின்னும் மாறவே இல்லை
 எழுந்துவாருங்கள் நீங்கள்
 அடிமை விலங்கின்னும் உடையவே…இல்லை
 எழுந்துவாருங்கள் நீங்கள்
கார்திகை மலர்களை கைகளில் ஏந்தி….
காணிக்கையாக்கி துாவ…
காவலர் உங்களின் பாதத்தில் நின்று..
கல்லறை தீபங்கள் ஏந்த..
உலகத் தமிழரின் நெஞ்சில்வாழ்பவர்
 உரும் தெரியாத நீங்கள்
 உன்னதப் போருக்காய் உம்மைதந்து
 கல்லறைதனியே நீங்கள்
 ஒளியில் திருமும் தெரியும் போதெல்லாம்
 உருகிவாழ்கிறோம்நாங்கள்
 ஓசைமணியேசை கேட்கும் போதெல்லாம்
 தொழுதுவாழ்கிறோம் நாங்கள்.

0 கருத்துக்கள் :