ஏழுமலையானை தரிசிக்க சென்ற இலங்கை பிரதமர் : திருப்பதியில் பதற்றம்

7.11.14

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலங்கை பிரதமர் சென்றுள்ளதை   அடுத்து அங்கு பதற்றம் உருவாகியுள்ளதாள். பிரதமரின் வருகையும்,அவரது தரிசன நேரம் ரகசியமாக பேணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் திசநாயகே முதியன்சேலாகே ஜெயரத்னே இன்று திருப்பதி சென்றுளார்.

அவரது வருகையை முன்னிட்டு தமிழக எல்லையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருத்தணி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.

மேலும் திருப்பதி கோவிலை சுற்றியும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயரத்ன, ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வசதியாக கோயில் அருகே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்த பின், ரேணிகுண்டாவில் இருந்து இலங்கை திரும்புகிறார் ஜெயரத்னே.

அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திருமலைக்கு சென்றபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க பலர் திருப்பதியில் கூடினர். இந்நிலையில், இலங்கை பிரதமர் செல்வதை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள நிலையில், இலங்கை பிரதமர் திருமலைக்கு வருவதால் அவரது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து திருமலை வரை பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :