தமிழீழத்தை உருவாக்க மீண்டும் முயற்சி:இந்தியா,அமெரிக்கா சதி

26.11.14

அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசம் இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தை தடுத்து நிறுத்தி பிரபாகரனை பாதுகாக்கவே முயற்சித்தது. அவர்களுடைய முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தமையால் ஐ.நாடுகள் சபைகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடாக தீர்மானத்தை கொண்டுவந்தார்கள்.

அந்தத் தீர்மானமும் பெரியளவில் கைக்கொடுக்காத நிலையில் தற்போது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
அதேவேளை அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தகர்த்தியுள்ளமையானது இலங்கையில் மீண்டும் தமிழீழத்தை உருவாக்கும் முயற்சியென்றே கூறவேண்டும் என ஆளுங்கட்சி குறைக்கூறி வருகின்றது.

இதனை எஸ்.பி.திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று தெரிவித்திருந்தார்.  இந்தியா இலங்கையில் ஈழத்தை உருவாக்கி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தமிழர்களுடன் இணைந்து விடுதலைப் புலிக்கு உயிர்கொடுக்க முற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :