இராணுவ சீருடையுடன் ஊர்காவற்றுறையில் ஒருவர் கைது

28.11.14

இராணுவ சீருடைக்கு ஒப்பான சீருடையை தன் வசம் வைத்திருந்த ஒருவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கொண்டு சென்ற குற்றத்திற்காக ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அவரைப் பார்க்க வந்த மற்றொரு இளைஞன் இராணுவத்தின் சீருடைக்கு ஒப்பான அரைக்காற் சட்டை ஒன்றினை அணிந்து வந்ததை அவதானித்த பொலிஸார் அவரை கைது செய்ததுடன் நீதிமன்ற நடவடிக்கைக்கும் உட்படுத்தியுள்ளார்.

விசாரணையின்  போது தான் விற்பனை நிலையம் ஒன்றில் வாங்கியதாக தெரிவித்துள்ளார். எனவே விற்பனை நிலையத்தின் பெயர், எங்கு உள்ளது என்றும் உரிமையாளர் விபரம் மற்றும் சீருடையினை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்தும் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த துணியை இராணுவ சீருடைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் அதனை இராணுவத்தினர் தவிர்ந்த ஏனையவர்கள் எவரும் பயன்படுத்த முடியாது என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த இளைஞனிடம் எவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளது என்ற கோணத்தில் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :