விலைபோகக்கூடியவர்கள் இனி எனது அமைச்சரவையில் இல்லை: ஜனாதிபதி

30.11.14

பவுண்களாலோ அல்லது டொலர்களாலோ விலைகொடுத்து வாங்கக்கூடியவர்கள் இனியும் என்னுடைய அமைச்சரவையில் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, அரசியலுக்கு பிரவேசித்து 25 வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று மாத்தறையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
 'முதுகெலும்பு அற்ற சிலரை தலைவர்களாக்கும் தேவை, சில வெளிநாட்டுச் சக்திகளுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அடிக்கும் தாளத்துக்கேற்ப ஆடுபவர்களை நியமிக்க வேண்டும் என்பதே அந்த சக்திகளின் நோக்கமாகும்.

இருப்பினும், எமது மக்கள் அவ்வாறானவர்களுக்கு இடமளிப்பதில்லை. யார் வந்தாலும், என்னை தோற்கடிக்க முடியாது. ஒருசிலர் என்னை, போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு அனுப்ப முயற்சிக்கின்றனர்.
பேய்க்கு பயந்தவர்கள், மயானத்தில் வீடு அமைக்கக் கூடாது என அவர்களுக்கு நான் சொல்ல விரும்புகின்றேன்' என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :