மர்ம உறுப்பற்ற முண்டத்தை இழுத்துச்சென்ற வான் மீட்பு

10.11.14

நாவலப்பிட்டியில் மர்மமான முறையில் இறந்த ஆண்ணொருவரின் முண்டத்தை கம்பளை பக்கமாக சுமார் 17 கிலோமீற்றர் இழுத்துச்சென்றதாக சந்தேகிக்கப்படும் வானை தாம் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நகரில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமெராவினால் (சி.சி.டீ) அந்த வானை மூன்று நாட்களுக்குள் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கம்பளை நகரில், தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தவரின் சடலம் கடந்த வியாழக்கிழமை 06ஆம் திகதி, கடுகண்ணாவை வீதியின் ஓரமாக கிடந்த நிலையில் மீட்கப்பட்டது.

குறித்த சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இரத்தக் காயங்கள் இருந்ததுடன் மர்ம உறுப்பும் இல்லாமல் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :