ஜனாதிபதிக்கு கொடுத்த ஆதரவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: மலையக மக்கள் முன்னணி

23.11.14

ஜனாதிபதிக்கு கொடுத்த ஆதரவை பற்றி மீண்டும் பரிசீலிக்க வேண்டியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஏ.லோரண்ஸ் தெரிவித்தார்.
 அட்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் இருந்த காலத்திலும் சரி இன்றும் சரி என்றும் சரி முக்கியமான தேர்தல் காலத்திலேயே நாங்கள் பாரிய பங்களிப்பை செய்திருக்கின்றோம்.
நாங்கள் சிந்தித்து பார்த்து தான் ஆதரவு கொடுப்போம். மக்களின் பிரச்சினைகளை முக்கியப்படுத்தி தான் ஆதரவு கொடுப்போம்.

அந்தவகையில் மலையக மக்கள் 200 வருடகாலமாக இன்னும் லயன் குடியிருப்புகளியிலே இருக்கின்றார்கள். இந்த லயன் முறையை மாற்றி காணி உரிமையோடு தனி தனி வீடுகள் கட்டியமைப்பது தலைவர் சந்திரசேகரனின் கனவு.

அதை தான் நாங்கள் இன்றும் வலியுறுத்தி வருகின்றோம். இந்த நாட்டில் இன பிரச்சினை இருக்கின்றது. அந்த இன பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.  இந்த இன பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வும் வரவேண்டும்.

தற்போது அரசியல் ரீதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் நாங்கள் கூறிய ஆதரவை மீண்டும் சிந்திக வேண்டியுள்ளது. இருக்கின்ற அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதா அல்லது வேறு தீர்மானத்தை எடுப்பதா என்று சிந்திக வேண்டியிருக்கின்றது.

இங்கு ஏற்பட்டுள்ள அரசாங்க மாற்றத்தினாலேயே இந்த சிந்திக வேண்டியுள்ள நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சில கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்திருந்தாலும் நாங்கள் ஜனாதிபதியிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்திருந்தோம்.
ஆனால் இங்கு ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலேயே சிந்தித்து பார்க்க வேண்டியுள்ள நிலைமையுள்ளது.

0 கருத்துக்கள் :