மேர்வினை அச்சுறுத்திவிட்டு மாயமான இளைஞன்

25.11.14

மாலக்க சில்வாவின் வழக்கு விசாரணையில் கலந்துகொள்வதற்காக கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்குச் செல்வதற்காக நீதிமன்ற வாசலில் வந்திறங்கிய அமைச்சர் மேர்வின் சில்வாவை, பெஜிரோ ரக வாகனமொன்றில் வந்த இளைஞன் ஒருவர் அச்சுறுத்திவிட்டு, அங்கிருங்கு திடீரென பறந்து மாயமாகிய சம்பவமொன்று இன்று செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது.

நீதிமன்ற வாசலில் வந்திறங்கிய மேர்வின் சில்வா முன்னிலையில், பெஜிரோ ரக வானத்தில் திடீரென வந்துநின்ற அவ்விளைஞன், 'அமைச்சரினால் எங்களுக்கு பல அசாதாரணங்கள் நிலவியுள்ளன' என்று தெரிவித்துவிட்டே அங்கிருந்து வேகமாகச் சென்றுள்ளான்.

அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், அவ்விளைஞனைப் பின்தொடர முயன்ற போதிலும் அவ்விளைஞன் வந்த வாகனம், அங்கிருந்து வேகமாகச் சென்று மாயமாகியுள்ளது.

ஸ்கொட்லாந்து பிரஜையொருவரையும் அவரது காதலியையும், கொழும்பு – டுப்ளிகேஷன் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் வைத்து தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாலக்க சில்வாவும் அவரது நண்பர்களும் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று இடம்பெற்ற நிலையிலேயே, அதில் கலந்துகொள்வதற்காக மேர்வின் சில்வா நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தார். இதன்போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றது.

இச்சம்பவத்தை அடுத்து, அமைச்சரிடம் கூடிய ஊடகவியலாளர்கள், அரசாங்கத்தை விட்டுச் செல்லவுள்ளீர்களா என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர், 'இல்லை, அவ்வாறானதொரு எண்ணம் இல்லை' என்று பதிலளித்தார்.
 

0 கருத்துக்கள் :