ஐ.தே.க காரியாலயம் மீது சூடு

25.11.14

கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி அமைப்பாளருமான எம்.எச்.ஏ ஹலீமின் தேர்தல் காரியாலயம் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கண்டி மாவில்மடயில் உள்ள கட்சி காரியாலயத்தின் மீதே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். அச்சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காரியாலயத்தில் இருக்கவில்லை.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :