மைத்திரிபால அரசாங்கத்தை விட்டு விலகமாட்டார்: வெறும் வதந்திகளே

20.11.14

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிரணிக்கு மாறுவார், பொதுவேட்பாளராக களமிறங்குவார் என கதைகப்படுகின்றது. தேர்தல் காலத்தில் இவ்வாறு கதைக்கப்படுவது சகஜமான விடயமே. அவ்வாறு பொதுவேட்பாளராக களமிறங்குவார் எனின் அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பார். எனினும் அவர் அரசாங்கத்தை விட்டு விலகமாட்டார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என அமைச்சரவை பேச்சாளரும்  அமைச்சருமான  கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,

 மைத்திரிபால சிறிசேன
 அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிரணிக்கு மாறுவார், பொதுவேட்பாளராக களமிறங்குவார் என கதைகப்படுகின்றது. தேர்தல் காலத்தில் இவ்வாறு கதைக்கப்படுவது சகஜமான விடயமே. அவ்வாறு பொதுவேட்பாளராக களமிறங்குவார் எனின் அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பார். மேலும் மத்திய குழுக் கூட்டம் மற்றும் அமைச்சரவை செயற்குழு கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கு பற்றினார். இதனை அவர் ஊடகங்களிலும் தெரிவித்திருந்தார். இதற்காக அவர் காலத்தை கடத்த வேண்டிய தேவை இல்லை. எனவே அவர் அரசாங்கத்தை விட்டு விலகமாட்டார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

நிறைவேற்று அதிகாரம்
 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என எதிரணியினர் பொது இடங்களில் சத்தமிட்டு கொண்டிருக்கின்றனர். இதனால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. இவ்வாறான பிரச்சினைகளை தீர்த்துகொள்வதற்கே பாராளுமன்ற தெரிவு குழு இருக்கின்றது. ஆனால் இதில் பங்குபற்றாமல் வீணாக தமது காலத்தை கடத்துகின்றனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமானால் நாம் தனித்துவமாக செயற்பட முடியாது. கட்டாயம் எதிரணியினரின் பங்களிப்பும் அவசியமாகும்.

ஜனாதிபதி தேர்தல்
 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவே பொது வேட்பாளராக களமிறங்க உள்ளார். மேலும் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஸவை பொது வேட்பாளராக  அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா முன்மொழிய   அமைச்சர்களான  ஏ.எச்.எம். பௌசி மற்றும் சி.பி. ரத்நாயக்க உள்ளிட்ட பலர் ஆமோதித்தனர். இதேவேளை எதிரணியில் பொதுவேட்பாளரை மூன்று மாதகாலமாக தேடிகொண்டிருக்கின்றனர். சந்திரக்கா அல்லது பொன்சேகா அல்லது கரு ஜயசூரிய என யார் போட்டியிட்டாலும் ஜனாதிபதிக்கு வெற்றி நிச்சயம்.

ஜாதிக ஹெலஉறுமய
 ஜாதிக ஹெல உறுமய இன்னமும் அரசாங்கத்தை விட்டு விலகவில்லை. அவர்கள் அமைச்சு பதவிகளை மாத்திரம் இராஜினாமா செய்துள்ளனர். இவ்வாறு பிரிவுகள் ஏற்படுவது அரசியலில் சாதாரண விடயமாகும்.

எரிக் சொல்ஹெய்ம்   
எரிக் சொல்ஹெய்ம் பற்றி உண்மையில் கூற வேண்டுமென்றால் அவர் நாட்டை முற்றாக அழித்தவர் என்றே கூற வேண்டும்.  விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது அவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்து நாட்டை அழிவுபாதைக்கு இட்டுச் சென்றவர் இவர். சுனாமி நேரத்தில் அதனை சாதகமாக கொண்டு விமான உதிரிபாகங்கள் மற்றும் வானொலி சேவையை மேற்கொள்வதற்கான உபகரணங்களை மறைமுகமாக கொண்டுச் சென்று புலிகளுக்கு கொடுத்தார். இவ்வாறு நாட்டுக்கு எதிராக செயற்பட்டவர் எவ்வாறு உண்மையை கூறுகின்றார் என நம்ப முடியும். நாட்டையே பயங்கரவாத்தில் இருந்து காப்பாற்றிய ஜனாதிபதி பல பொய்களை சொன்னாலும் அதை பெரிதுபடுத்த வேண்டிய தேவை எமக்கு இல்லை என்றார்.

0 கருத்துக்கள் :