யாழ். பல்கலையைச் சுற்றி இராணுவம்

26.11.14

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி, நேற்று செவ்வாய்க்கிழமை (25) இரவு முதல் இராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பவள், கவச வாகனங்கள் மூலம் கொண்டு இறக்கப்பட்ட இராணுவத்தினர், அவ்வழியாக வாகனங்களில் சென்றோரை சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் மாவீரர் தினக் கொண்டாட்டங்கள் என்பன பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதை தடுக்கும் நோக்குடன் இராணுவத்தினர் இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :