குஷ்பு மன்னிப்பு கோர வேண்டும்; இல்லையேல் வீட்டை முற்றுகையிடுவோம்

30.11.14

தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில்  தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம் என குஸ்பு கூறியிருப்பதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழர் முன்னேற்ற படை அமைப்பு தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கம் என நடிகர் குஷ்பு கூறியிருப்பது குறித்து தமிழர் முன்னேற்ற படை அமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழர் பண்பாடு, நாகரீகம் ,வாழ்வியல் நெறி , வரலாற்று தொன்மை ஆகியவற்றை சிதைக்கும்  வகையில் நடிகை குஷ்பு பேசிவருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழ் இனத்தின்  போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையிலும் ஒட்டு மொத்த தமிழர்களை அவமானப்படுத்தும் வகையிலும் ஈழ மக்களுக்கு எவ்வித தியாகமும் செய்யாத வெளிமாநில பெண் தமிழர் வரலாறு கடுகளவும் தெரியாது இருக்கும் நிலையில் தீவிரவாத இயக்கம் என்று கூறி வருகின்றார்.

ஐரோப்பிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு அல்ல என்று கூறி அவற்றின் மீதான தடையை அண்மையில் நீக்கியுள்ளது. இந்தியாவிலும் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த வேளையில் சினிமா கவர்ச்சி நடிகை குஷ்பு ஈழ விடுதலை போராளிகளை தீவிரவாதிகள் என்று அரசியல் ஆதாயத்திற்காக கூறுகிறார். இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டதற்கு பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்.


குஷ்பு மன்னிப்பு கோராவிடில் குஷ்பு வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அமைப்பு தனது அறிக்கையில்  மேலும் தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :