விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் ; நடிகை குஷ்பு

29.11.14

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு தீவிரவாத இயக்கமெனவும் காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்துக்குத்தான் எதிரியே தவிர ஈழத் தமிழருக்கு அல்ல என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

தி.மு.க.வில் இருந்து விலகிய நடிகை குஷ்பு திடீரென டெல்லியில் சோனியாவை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்துப் பெற்றுவிட்டு சென்னை திரும்பிய குஷ்பு இன்று செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நிச்சயமாக ஒரு தீவிரவாத இயக்கம்தான். தீவிரவாதத்தை கடைசி மூச்சு உள்ளவரை எதிர்ப்போம். அவ்வாறு எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியை  ஈழத் தமிழருக்கு எதிரான கட்சியாக சிலர் சித்தரித்துள்ளனர். என தெரிவித்தார்.

குஷ்புவின் இந்த கருத்துக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களிடம் இருந்து பெருமளவில் விமர்சனங்களும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
 

0 கருத்துக்கள் :