இன்று தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம்

26.11.14

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 60வது பிறந்த நாள் இன்றைய தினம் புலம்பெயர் நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை கேக் வெட்டிக் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1954ம் ஆண்டு வல்வெட்டித் துறையில் பிறந்தார். இவரது தலைமையிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

2009ம் ஆண்டுக்கு முன்னர் வரையில் இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தமை குறிப்பிட்டத்தக்கது.

0 கருத்துக்கள் :