மஹிந்தவின் இராஜாங்கத்தை ஒழிக்க முன்வந்துள்ளோம் : ராஜித்த

22.11.14

நான் நாட்டிற்காக செயலாற்றவே அரசியலுக்கு வந்தேன். அதனைக் கருத்தில் கொண்டு நான் எனது பதவிகளை துறந்து, மஹிந்தவின் இராஜாங்கத்தை ஒழிக்க நாம் தற்போது முன்வந்துள்ளோம் என ராஜித்த சேனரத்ன தெரிவித்தார்.

புதியநகரமண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாழக்கையில் சந்தோனமான தருணம்
 எனம் அரசியல் வரலாற்றில் நான் மிகவும் சந்தோசடைந்த நாள் எதுவென்றால் இன்றைய நாளாகும். அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக தெரிவு செய்யப்பட்டமை சந்தோசமான விடயமாகும்.

மஹிந்த குடும்பத்திற்கும் எனக்கும் பிரச்சினையில்லை
 எனது எதிரிகளுக்கு நான் ஒரு போதும் துரோகம் நினைக்கமாட்டேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கும் எனது குடும்பத்திற்கும் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. நான் நாட்டிற்காக செயலாற்றவே அரசியலுக்கு வந்தேன். அதனைக் கருத்தில் கொண்டு நான் எனது பதவிகளை துறந்துள்ளளேன்.

சேறு பூசுவார்கள்
 இந்த தீர்மானத்திற்காக சிலர் எங்கள் மீது சேறு பூச நினைப்பார்கள். நான் அதனையெல்லாம் பொருட்படுத்த மாட்டேன். நான் எனது நாட்டு மக்களுக்காக வாழத் தயாராகவுள்ளளேன்.நான் இதன் போது ஊடகவியலாளர்களுக்கு ஒன்று தெரிவிக்க விருமபுகின்றேன். நீங்கள் பக்கச்சார்பற்ற நிலையில் நேர்மையாக உங்களுடைய சேவையை செய்ய வேண்டும். அப்போது தான் நீங்களும் வரலாற்றி;ல் இடம்பிடிப்பீர்கள். மக்களுக்கு உண்மையான செய்திகளை நீங்கள் வழங்க வேண்டும்.

வரப்பிரசாதங்களை இழந்துள்ளேன்
 அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளதால் பதவி, பணம், வீடு மற்றும் வாகனம் என அனைத்தையும் இழந்துள்ளேன். மக்களுக்காக சேவை செய்த நாம் இவற்றை எதிர்பார்து ஆட்சிக்கு வரவில்லை. தேர்தல் காலத்தில் அமைச்சர் ஒருவர் 8 இலட்சத்துக்கு போஸ்டர்களை ஒட்டியதாகவும் இதனை பதவிக்கு வந்தவுடன் சம்பாதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்கள். இவ்வாறானவர்களே ஆட்சியில் உள்ளனர்.

நிறைவேற்று அதிகார பயங்கரவாதம்
 புலி பயங்கரவாதம், ஜே.வி.பி. பயங்கரவாதம் என தற்போது நிறைவேற்று அதிகார பயங்கரவாதத்துக்கு உட்பட்டுள்ளோம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீண்ட தூரம்கொண்டுச் செல்ல முடியாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஊடக சுதந்திரம்
 நாட்டில் ஊடக சுதந்திரம் என்பது முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை நாம் நன்கு அறிவோம். ஆனால் நீங்கள் யாரும் எந்த அதிகாரத்துக்கும் அடிப்பணிந்து உங்கள் பேனையை முடக்கி விட வேண்டாம்.

ரணிலின் அர்ப்பணிப்பு
 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தான் பொதுவேட்பாளராக களமிறங்காமல் அமைச்சர் மைத்திரிபால சிறசேனவை களமிறக்க தீர்மானித்துள்ளார். இதுவே அரசியல் அர்ப்பணிப்பு ஆகும்.

இது ஆரம்பமே
 இது ஆரம்பம் மாத்திரமே. இன்னும் தொகுதி தொகுதியாக எம்முடன் இணைய பல பேர் காத்திருக்கின்றனர். மீதமாக யார் மிஞ்சுவார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

0 கருத்துக்கள் :