மதிமுகவை நீக்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை

4.11.14

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க.வை நீக்குமாறு பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூட்டணி கட்சிகளுக்கு இருக்க வேண்டிய தேசிய பார்வைக்கு முரணாக ம.தி.மு.க. நடந்துகொள்கிறது. அதன் தலைவர் வைகோ, தேசியத்துக்கு எதிராகவும், பிரிவினைவாதத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார்.

எனவே, பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முடிவு எடுக்குமாறு கட்சி தலைவர் அமித்ஷா, தமிழக பொறுப்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோருடன் பேசி உள்ளேன். ம.தி.மு.க.வை நீக்குவதற்கு நோட்டீசு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :