எனக்கு ஜனாதிபதி செய்த கொடுமைகளை சொல்ல இது நல்லதொரு சந்தர்ப்பம் : சந்திரிக்கா

21.11.14

எனக்கு தற்போதைய ஜனாதிபதி பல கொடுமை செய்துள்ளார். ஒரு பெண்ணாக சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்தேன்.அதனையெல்லாம் சொல்வதற்கு இது நல்லதொரு சந்தர்ப்பமாகக் கருதுகிறேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

புதிய நகர மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீண்டும் சந்தர்ப்பம்
கொள்கின்றேன்.மீண்டும் எனது அரசியல் இல்லத்திற்கு வருவதற்கு எக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைதுள்ளது. நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் நீண்ட நாட்களாக கடமையாற்றி வந்துள்ளளேன்.
கடந்த 9 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் அரசியலுக்கு வந்ததை எண்ணி  சந்தோஷமடைகின்றேன்.

மஹிந்த கட்சியிலிருந்து நீக்கினார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆசனத்தில் அமர்த்திய போதும் அவர் எனக்கு எதிராக செயற்பட்டு என்னை கட்சியிலிருந்து தூக்கியெறிந்துள்ளார். நான் சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியில் இருக்கும் போது எனது பிறந்த தினத்தன்று அப்பதவியிலிருந்து என்னை நீக்கினார். ஒன்பது வருடங்கள் முடிவடைந்தும் மௌனமாக இருக்கிறேன்.

பெண்ணாக சொல்ல முடியாத வேதனைகள்
நான் கட்சியில் இருக்கும் போது ஒரு பெண்ணாக வெளியில் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்தேன்.  எனக்கு தற்போதைய ஜனாதிபதி பல கொடுமை செய்துள்ளார். இவ்வளவு காலம் பொறுமை காத்தும் இவர்களின் ஆட்சியில் மாற்றம் ஏற்படவில்லை. சர்வதிகாரம் மேலோங்கி காணப்படுகின்றது. நான் இவ்வளவு காலம் நிறைய விடயங்களை பொறுத்திருந்து சந்தர்ப்பம் வரும்வரை காத்திருந்தேன். அதனையெல்லாம் சொல்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்பம் எனக் கருதுகிறேன்.

கட்சி சீரழிக்கப்பட்டுள்ளது
கட்சியின் கொள்கைகள் மாற்றப்பட்டு கட்சி சீரழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. என்னால் பொறுமை காக்க முடியவில்லை. சுதந்திர கட்சி என்பது ஒரு ஜனநாயக கட்சியாகும். ஆனால் அராஜக குடும்ப ஆட்சி இடம்பெறுகின்றது.

வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்று எழுதி வருகின்றேன்
நான் எனது வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்று எழுதி வருகின்றேன். அதன் மூலம் உங்களுக்கு அதனை விரைவில் அறிய முடியும்.இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றிகொள்வோம். எமது ஆட்சியன் போது இந்த நாட்டின் சிறு பான்மையினத்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி ஆட்சி நடத்துவதோடு ,நிறைவேற்று அதிகாரத்தினையும் இல்லாதொழிப்போம்.

மைத்திரிபால சிறிசேன
மைத்திரிபால சிறிசேன மக்களின் கஷ்டங்களை நன்கு அறிந்தவர். அவரின் தந்தை ஒரு விவசாயி என்பதால் அனைவரின் கஷ்டங்களையும் நன்கு அறிந்து செயலாற்றக் கூடியவர்.தற்போது உள்ள காவற்றுறையினருக்கு அவர்களின் கடமையை முறையாக செய்ய முடியாத நிலையுள்ளது. நேர்மையாக கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் தண்டனை பெற வேண்டியுள்ளது. அதனால் அதிகாரிகள் தங்களின் கடமையை செய்ய தவறுகின்றனர். நாம் ஆட்சிக்கு வந்தால் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது என அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுவேட்பாளர்
 ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு பல அனுகினர். ஆனால் அதிகார ஆசையில்லாமல் நான் அதனை ஏற்றுகொள்ளவில்லை. நான் ஆட்சியில் இருக்கும் போது 3ஆவது முறையாக போட்டியிடலாம் என கொண்டு வந்த சட்ட மூலத்தை நிராகரித்தேன். இந்நிலையில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால் சிறப்பான விடயமாகாது.

ஊழல் மோசடி
நாட்டில் இலஞ்சம், கொலை, கொள்ளை, வெள்ளை வேன், ஊழல்  என தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் இல்லை. சட்டத்தின் ஆட்சி இல்லை. சர்வதிகார ஆட்சியில் ஊழலே நிறைந்து காணப்படுகின்றது. நீதி மற்றும் பொலிஸ் சேவை சுயாதீனமாக இடம்பெற வேண்டும்.

0 கருத்துக்கள் :