ஆணொருவரின் சடலம் மீட்பு

17.11.14

வெலிமடை, ஹப்புத்தலை பிரதான வீதி ஹத்தவெல பகுதியில் திங்கட்கிழமை(17) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபரொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சடலம் அடையாளங்காணப்படாத நிலையில் உள்ளதாகவும் பிரேத பரிசோதனைக்காக வெளிமடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :