பொன்சேகாவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இணையும் சாத்தியம்

11.11.14

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்துகொள்ளவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனநாயகக் கட்சியின் பிக்குகள் அமைப்பைச் சேர்ந்த தேரர்கள் மற்றும் கட்சியின் இணைப்பாளர்கள் சிலர் இந்த கட்சி மாறவுள்ள குழுவின் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ள இக்குழுவினர், நேற்று திங்கட்கிழமை மாலை, அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :