மாத்தளை எலும்புக் கூடுகள் ; 1951 ஆம் ஆண்டுக்கு முந்தியவை

19.11.14

மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் 1951 ஆம் ஆண்டுக்கு முந்திய காலத்திற்கு உரியது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எலும்புக்கூடுகளின் காலம் குறித்த ஆய்வு அறிக்கை நேற்று மாத்தளை நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டது. மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனை நிறைவில் மேற்கண்ட தகவல் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :