ரஜினியை சுற்றி வளைக்கும் எடியூரப்பா, அமித்ஷா, மோடி!

9.10.14

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது  பிரசாரத்துக்கு சென்னை வந்த நரேந்திர மோடி, ரஜினிகாந்த்  வீட்டுக்கே சென்று சந்திக்க அரசியல் அரங்கில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகமானது. ஆனாலும் ரஜினிகாந்த் வெளிப்படையாக எதையும் அறிவிக்க வில்லை.


ரஜினிகாந்த் பாரதீய ஜனதாவுக்கு இழுக்க வியூகம் வகுக்கபட்டு வருகிறது.


அகில இந்திய தலைவர் அமித்ஷா ரஜினியுடன் 3 முறை போனில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித்ஷாவின் பேச்சுவார்த்தைக்கு பிறகு ரஜினி தரப்பிலும் மாற்றங்கள் தென்படுவதாக கூறப்படுகிறது.


லிங்கா படப்பிடிப்பில் இருந்த ரஜினியை கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில தலைவர் ஈஸ்வரப்பா ஆகியோரும் நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசி இருக்கிறார்கள்.


பெங்களூர் ரசிகர் மன்ற தலைவர் இளவரசன் ரஜினியை சந்தித்து ’நீங்க அரசியலுக்கு வரணும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை கேட்ட ரஜினி ’கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ என்று பதில் அளித்துள்ளார்.


இதனால் அவர் அரசியலுக்கு வரும் காலம் கனிந்து வருவதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த ரஜினியை இழுப்பதில் மோடியும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவரது உத்தரவுப்படியே அமித்ஷா பேசி வருவதாக கூறுகிறார்கள்.


ரஜினியிடம் பேசிய அமித்ஷா,  நீங்கள் எங்கள் கட்சிக்கு வந்தால் முதல்வர் வேட்பாளர் நீங்கள் தான் என்று உறுதி அளித்துள்ளார். அதற்கு ரஜினி படப்பிடிப்பு முடியட்டும் பதில் சொல்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.

0 கருத்துக்கள் :