ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது - ராஜித

20.10.14

ஒரு இனம்  இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாதென தெரிவித்துள்ள  அமைச்சர் ராஜித சேனாரத்ன  எத்தகைய  அபிவிருத்திப் பணிகளை  மேற்கொண்டாலும்  மனிதத்துவ பண்பு கொண்டவர்களை கட்டியெழுப்பத் தவறினால் பயனில்லை எனவும்  சுட்டிக்காட்டினார்.

நாட்டில் சுதந்திரத்திற்காக அன்று  சிங்கள  தலைவர்களுடன் தமிழ் முஸ்லிம் தலைவர்களும்  ஒன்று சேர்ந்து  போராடினர். இந்த ஒற்றுமையின் காரணமாக  நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. 

ஆறு தசாப்தங்களுக்கு முன் எமது  தாய்நாட்டிற்கு கிடைத்த சுதந்திரத்தை பேணி பாதுகாப்பதற்கு சகல சமூகத்தவரும் கைகோர்த்து செயல்பட  வேண்டும்.  சிங்கள  தலைவர்களுடன் சேர் பொன்னம்பலம்  ராமநாதன், அருணாச்சலம்,  மஹாதேவா, ரி.பி. ஜாயா போன்ற தலைவர்கள் நாட்டிற்கு  செய்த தியாகம் மறக்க முடியாதவை.

நாம் எத்தகைய  அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டாலும்  மனிதத்துவப் பண்பு கொண்டவர்களை கட்டியெழுப்பத் தவறினால்  அதில்  பயனில்லை. மனித உள்ளம்  சீர் பெற வேண்டும். ஒரு இனம்  இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது.

  தனிச்சிங்கள மொழிச்சட்டம்  காரணமாக  எமக்கு என்ன பலன்கள்  கிட்டியது. 40 வருடங்களின் பின் சிங்களத்துடன்  தமிழ் மொழிக்கும் சம  அந்தஸ்து   கொடுக்கப்பட்டது.

0 கருத்துக்கள் :