தமிழர்களை பாதுகாக்க தவறிய மூனுக்கு நோபல் பரிசா?

10.10.14

ஐ.நாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஈழத்தமிழர்களை பாதுகாக்க தவறியுள்ளார் எனவே அவர் எவ்வாறு நோபல் பரிசு பெறுவார் என சர்வதேச ஊடகமான  இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

ஐ.நாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நோபல் சமாதான விருதினை பெற்றுக் கொள்ளும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

எனினும் அவருக்கு சமாதான விருது கிடைக்கக் கூடிய சாத்தியங்கள் அரிதாகவே காணப்படுவதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

பாப்பாண்டவர், பாகிஸ்தான் சிறுமி மலாலா மற்றும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு உள்ளிட்ட தரப்பினரது பெயர்களும் சமாதான விருதிற்கான பட்டியலில் முன்னணி வகிக்கின்றன.

பான் கீ மூனுக்கு சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக விருது கிடைப்பதனை விடவும் காலநிலை மாற்றம் தொடர்பில் எடுத்துக் கொண்ட சிரத்தைக்காகவே விருது கிடைக்க அதிக சாத்தியங்கள் காணப்படுவதாக இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறெனினும், யுத்தங்களின் போது மத்தியஸ்தம் வகித்தல், பக்கச்சார்பற்ற வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குதல், சமாதானத்தை ஏற்படுத்தல் போன்ற விவகாரங்களில் பான் கீ மூன் குறைந்தளவு வெற்றியையே பதிவு செய்துள்ளார்.

2009ம் ஆண்டு இலங்கையில் அரசாங்கம் பொதுமக்களை கொலை செய்த போது பான் கீ மூன் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் பான் கீ மூன் நோபல் வருது பெறுவதற்கான வாய்ப்பினை குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவே பலரும் கருதுகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கடமை தவறி செயற்பட்டதாகவும் இதனால் அவருக்கு நோபள் சமாதான விருது வழங்கப்படக் கூடாது எனவும் இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :